பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ கன்னன் பாட்டுத்திறன் ம்ைபெருமானது ஐகவரியம் அளவற்றது. இந்த ஐகவரியம் நம் நாதனுடைய ஐசுவரியம் என்று அது சந்தித்து, நாமும் அந்த ஐசுவரியத்தினுள் அடங்கவும் பெற்றால் அளவிட முடியாத விபூதியைக் கண்டு நாம் பின் வாங்க அவசியமும் இல்லை, எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள உறவை-சம்பந்த ஞானத்தை -உணரவே கூச்சம் குலையும். சம்பந்த உணர்ச்சி உண்டாகும் அளவே வேண்டற்ப்ாலது” என்பது இப் பாசுரத்தின் தேர்ந்த பொருளாகும். 'எம்பெருமானது விபூதியிலுள்ள நாமும் ஒருவராக அடங்கப் பார்க்கவேண்டும். இதனைத் தெளிந்து நாம் கைங்கரியங்கள் செய்யவேண்டும்” என்பது கருத்து, இந்தப் பாசுர விளக்கஉரையில் உரையாசிரியர் காட்டும் கதையும் இந்தச் சம்பந்த ஞானத்தை அறிய நமக்குத் துணை செய்யும்; சம்பந்த ஞானம் என்ற கருத்து மனத்தில் பதியவும் வகை செய்யும். வணிகன் ஒருவன் தன் மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் பொருள் தேடும்பொருட்டு வெளிநாடு செல் கின்றான்-இப்போது மலேயா, சிங்கப்பூர், தூபாய் போன்ற வெளி நாடுகட்கு மக்கள் செல்லுவதுபோல. அவன் வெளிநாட்டிலிருந்தபோது மனைவி கருவுயிர்க் கின்றாள். மகனும் தக்க வயது அடைந்து தன் தந்தையா ருடைய தொழி லா கி ய வாணிகத்தையே மேற் கொள்ளுகின்றான். இவனும் வெளிநாடு சென்று பொருள் சேமிக்கின்றான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்கு பிடித்துக்கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்குகின்றனர். அப் பந்தலில் உள்ள இடம் போதுமானதாக இல்லை. இருவரிடையேயும் இடம்பற்றி வாக்குவாதம் நிகழ் கின்றது. அவ்வமயம் இருவரையும் அறிவான் ஒருவன் வந்து தலையிட்டு இவன் உன் தந்தை; நீ இவன் மகன்' என்று அறிவிக்கின்றான். இருவரும் கீழ் இழந்த நாட்கட்கு