பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனைப்பற்றிய தனிப்பாடல்கள் § 1 of மாதவன் என்று என்று ஒத வவ்வீரேல் தீதுஒன்றும் அடையா ஏதம் சாராவே (7) என்பது திருவாய்மொழிப் காசுரம். புகழ்வீர் கண்ணன் தகைசேர் அமரர் தொகையோ(டு) அசுரர் பகைதீர்ப்பதையே (5) என்பது பாரதியாரின் பாடல், இவை இரண்டிலும் ஓரளவு கருத்தொற்றுமை காணப்படுகின்றது. நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணம் தானே (2) என்ப்து திருவாய்மொழிப் பாசுரம். நலமே நாடில் புலவீர் பாடிர் நிலமா மகளின் தலைவன் புகழே (4) என்பது பாரதியார் பாடல். ஆழ்வார் பாகரத்திலுள்ள "பாரணங்கு ஆளன் என்ற தொடர் பாரதியாரின் பாடலில் நிலமா மகளின் தலைவன்’ என்று மாறிக்கிடக் கின்றது; ஆனால் இரண்டிலும் கருத்தொற்றுமை இல்லை. ஆழ்வார் மறந்தும் புறந்தொழா மாந்தர்: ப்ாரதி யாரோ சமரச நிலையினர்; எல்லாக் கடவுளர்களையும் காடுபவர்; வழிபடுபவர். ஆகவே, ஆழ்வாரி பாசுரங்களில் திருமால், நாரணன், ஆரவு அணையான், காயாமலர்