பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感露娜 கண்ணன் பாட்டுத்திறன் வண்ணன், மாதவன், முகில் வண்ணன், நெடியான் என்றெல்லாம் சுட்டப்பெறுகின்றான். பாரதியாரோ தம் பாடலில் பல கடவுளர்களையும் கட்டுகின்றார். தவறாது உணர்வீர் புவியீர்! மாலும் சிவனும் வானோர் எவரும் ஒன்றே (7) ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி என்றும் திகழும் குன்றா ஒளியே (8) இந்தப் பாடல்களில் திருமால், சிவன் தேவர்கள், சக்தி என்ற தெய்வங்கள் குறிப்பிடப்பெற்றிருப்பதைக் கான லாம். கருத்தில் வேறுபடினும் பாடல் அமைப்பு ஒன்று படுகின்றது. ஆழ்வாரையொட்டி பாரதியாரும் கண்ணன் வழிபாட்டில் ஆழங்கால் படுகின்றார்.