பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டிலமைந்துள்ள படிமங்கள் 露露翼 என்ற தொடர்களிலும் கட்புல உருக்காட்சிகள் அமைந்து பாட்டைக் கவினுறச் செய்வதைக் காண்க. 'கண்ணன்என் தந்தை' என்ற பாடலில் காணப்பெறும், நிறந்தனிற் கருமை கொண்டான்;-அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள் (4) என்ற அடிகளைப் படிக்கும்போது கருநிறக் கண்ணனும் பொன்னிறப் பெண்களும் நம் மனக்கண்ணில் வண்ணவடிவ உருக்காட்சிகளாக அமைகின்றனர். 'கண்ணன்என் அரசன், என்ற பாடலில் வரும் முல்லை மென்னகை மாதர் (4) என்ற தொடரில் கட்புல-வடிவ உருக்காட்சி தென்படுவதைக் காணலாம். கண்ணன்-என் சற்குரு' என்ற பாடலில் வரும், -தடி ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்;-ஒளி கூடு முகமும் தெளிவுதான்-குடி கொண்ட விழியும் சடைகளும்;-வெள்ளைத் தாடியும் கண்டு வணங்கியே-பல சங்கதி பேசி வருகையில் (3) என்ற பகுதியில் பல கட்புல-வடிவ உருக்காட்சிகள்.கவிதை யைக் கவினுறச் செய்வதைக் கண்டு மகிழலாம். இதே பாடலில் வரும், ஆதித் தனிப்பொரு ளாகுமோர்;-கடல் ஆகுங் குமிழி உயிர்களாம்;-அந்தச் சோதி யறிவென்னும் ஞாயிறு-தன்னைச் சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்;-இங்கு மீதிப் பொருள்கள் எவையுமே-அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;-வண்ண நீதி யறிந்தின்பம் எய்தியே-ஒரு நேர்மைத் தொழிலில் இயங்குவார் (8) என்ற பகுதியில் பல்வேறு கட்புல-வண்ண-வடிவ உருக் காட்சிகள் அமைந்து கவிதைக்கு எழிலூட்டுவதைத்