பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 கண்ணன் பாட்டுத்திரள் தெளியலாம். கண்ணம்மா-என் காதலி - 6 என்ற பாடலில்வரும், எல்லை யற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே! முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்டமே! கண்ணம்மா! (7) என்ற பகுதியில் கட்புல - வண்ண உருக்காட்சிகளை அதுதுவித்து மகிழலாம். செவிப்புல உருக்காட்சி : இவ்வகை உருக்காட்சிகளும் பாட்டின்பத்தை மிகுவிக்கத் துணை புரி கி ன் ற ன. 'கண்ணம்மா - என் தாய் என்ற பாடலில் வரும், -அலை எற்றிதுரை சுக்கியொரு பாட்டிசைக்கும்; ஒல்லெனுமப் பாட்டினிலே-அம்மை ஒமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண் (5) என்ற பகுதியில் தாய் தன் குழந்தைக்குக் காட்டும் "விரிகடற் பொம்மை பாட்டிசைப்பதிலும், ஆப்பாட்டில் ஒம் எனும் பெயர் ஒலிப்பதிலும் செவிப்புல உருக்காட்சி களைக் கண்டு மகிழலாம். கண்ணம்மா-என் சீடன்’ என்ற பாடலில் கவிஞர் சீடரிடம் முனிந்து பேசுகின்றார் : 'என்றுமிவ் வுலகில் என்னிடத் திணிநீ போத்திடல் வேண்டா போயோபோ என்று இடியுறச் சொன்னேன். (126-128) இப் பாடற்பகுதியைப் படிக்கும்போது க வி ளு f ன் இடிக்குரல் (செவிப்புல உருக்காட்சி) நம் மனக்காதில் கேட்கின்ற தன்றோ? கண்ணன்-என் ஆண்டான்' என்ற ப்ாடலில் ஆண்டானிடம் ஆடிமை பேசுகின்றான்;