பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器&垒 கண்ணன்பாட்டுத் திறன் கவைப்புல உருக்காட்சிகள். இப்பகுதியைப் படிக்கும் போதே பழத்தின் சுவையை நம் மனம் உணர்கின்ற தன்றோ? இதே பாட்டில் வரும் தேனொத்த பண்டங்கள் என்ற தொடரிலும் இவ்வகை உருக்காட்சி தென்படு கின்றது. கண்ணன்-என் காந்தன்' என்ற பாடல், கனிகள் கொண்டுதரும்-கண்ணன் கற்கண்டு போலினிதாய் (1) என்று தொடங்குகின்றது. கணிகள், கற்கண்டு இவை சுவைப்புல உருக்காட்சிகளை எழுப்புகின்றன; பாட்டைப் படிக்கும்போதே இனிப்புச் சுவையை நம் மனம் உணர் கின்றது. கண்ணம்மா-என் காதலி-(6). என்ற பாடலில் வரும், ஆசை மதுவே, கனியே அள்ளு சுவையே கண்ணம்மா! என்ற ஆடியைப் படிக்கும்ப்ோதே மது, கனி இவற்றின் ‘அள்ளு சுவையை நம் மனம் உணர்ந்து நுகர்கின்றது. காற்றப்புல உருக்காட்சிகள் : இவ்வகைக் உருக்காட்சிகள் அரியனவாகவே காணப்பெறுகின்றன. கண்ணன்-என் காதலன்' என்ற பாடலில் வரும் நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் (2) என்ற தொடரிலும். கண்ணன்-என் காந்தன்' என்ற பாட்டில் வரும், பணிசெய் சந்தனமும்-பின்னும் பல்வகை அத்தர்களும் குணியும் வாண்முகத்தான்-கண்ணன் குலவி நெற்றியிலே இனிய பொட்டிடவே-வண்ணம் இயன்ற சவ்வாதும் (1) கொண்டை முடிப்பதற்கே:-மணம் கூடு தயிலங்களும் (2)