பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露25 கண்ணன்பாட்டுத் திறன் என்ற அடியைப் படிக்கும்போதே இ வ் வ ைக உருக்காட்சியை (வெம்மை) நம் மனம் உணர்கின்ற தன்றோ? இயக்கப்புல உருக்காட்சிகள் : கண்ணன் பாட்டில் பல இடங்களில் இவ்வகை உருக்காட்சிகள் அமைந்து பாடலின் சுவையைப் பன்மடங்கு உயர்த்துகின்றன. சேனைத் தலைநின்று போர் செய்யும் போதினில் தேர் நடத்திக் கொடுப்பான் (தோழன்-2) ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல் செய்திடுவான் (மேலது.-4), பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட பாசியை யெற்றிவிடும்-பெரு வெள்ளத்தைப் போல் (மேலது.-5) தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந் தீமைகள் கொன்றிடுவான் (மேலது.-7) நல்ல நல்ல நதிகளுண்டு-அவை நாடெங்கும் ஓடிவிளையாடி வருங்காண் மெல்ல மெல்ல போயவை தாம்-விழும் விரிகடல்... (தாய்-5) பூமிக் கெனைய னுப்பினான்:-அந்தப் புதமண்ட லத்திலென் தம்பிகளுண்டு; நேமித்த நெறிப்படி யே-இந்த நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே டோமித் தரைகளிலெல்லாம் (தந்தை-1) மேற்காட்டப்பெற்ற தொடர்களிலும் பாடற்பகுதிகளிலும் இவ்வகை உருக்காட்சிகள் அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்க.