பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனுடன் நமது உறவுகள் 篮露 மனம் வருந்தி, இருவர் சரக்குகளையும் ஒன்றாகச் சேர்க் கின்றனர். தந்தை காப்பாற்றுகின்றவனாய், மகன் காப் காற்றப்படும் பொருளாய்க் கலந்துவிடுகின்றனர். இருக்கு வேதத்திலும் இக்கருத்து காணக் கிடக்கின்றது. 'சீவான் மாவும் பரமான்மாவும் உடலாகிய ஒரு மரத்தைப்பற்றி யிருந்தால், சீவான்மா இருவினைப் பயன்களை நுகரா நிற்கின்றது: பரமான்மா அவனை நுகர்வி த்து விளங்கா நிற்கின்றது” என்பது. இறைவன் ஏவுகின்றான்; நாம் ஏ. வ ப் படு ம் பொருளாகின்றோம். இதனையறிவதே சம்பந்த ஞானம் ஆகும். இதனை மேலும் விளக்கலாம். இந்த ஐசுவரிய மெல்லாம் வகுத்த சேவியாகிய எம்பெருமானுடைய ஐகவரியம் என்று நினைத்தால் நாமும் அந்த ஐசுவரியத் துடன் சேர்கின்றோம். போக பூமியாய் இருப்பது நித்திய விபூதி, நமது கர்மம் காரணமாக எம்பெருமானால் ஏவப் படுவதாய், அவன் விளையாட்டிற்காக இருப்பது லீலா விபூதி, இந்த உலகம். இதனை “அவன் உடைமை என்று நினைக்கத் தொடங்கும்போதே இதில் கர்மம் காரணமான தன்மை தோன்றாது; அவனுடைமை என்னும் தன்மையே தோன்றும். இதனுள் அடங்குகையாவது, தொன்று தொட்டே அவன் விபூதியில் சேர்ந்தேயன்றோ இருக்கின்றேன்" என்று உணர்வது. அதாவது, உடைமையுடையவன் என்னும் சம்பந்த ஞானம் அடியாக நாமும் அவன் விபூதி யில் ஒருவனாய்ச்சேர்தல் வேண்டும் என்பது. நாம் கடலில் புக்க துரும்பு என இரண்டு தலையிலும் நினைவின்றி இருக்க, அத்துரும்பு திரைமேல் திரையாகத் தள்ளுண்டு கோந்து கரையில் சேர்கின்றதைப்போன்று, நாமும் ஐக வரிய ஆலையால் தள்ளுறமாட்டோமா என்று கருதலாம்