பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டிலமைந்துள்ள படிமங்கள் 爱恩7 கலவை நிலை உருக்காட்சிகள் : சில பாடல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பலவகை உருக்காட்சிகள் அமைந்து அவற்றிற்குப் பொலிவூட்டுகின்றன. இவ்வகை உருக்காட்சி கள் சிலவற்றைக் காண்போம். வெடுக்கெனச் சினத்தி வெள்ளமாய்ப் பாய்த்திடக் கண்சிவந் திதழ்கள் துடித்திடக் கனன்று நான் (சீடன். 22-3) இந்த அடிகளில் சினத்தி நொப்புல உருக்காட்சியையும் (வெம்மை), கண்கள் சிவத்தல் கட்புல உருக்காட்சியையும் (வண்ணம்). வெள்ளமாய்ப் பாய்தல், துடித்திடுதல் இவை இயக்க நிலை உருக்காட்சிகளையும் எழுப்பச் செய்து, இக் கலவை நிலை உருக்காட்சி கவிதையைக் கவின்பெறச் செய்கின்றதன்றோ? தேனிலினிய குரலிலே-கண்ணன் செப்பவும் (சற்குரு-12) என்றதொடரில் தேன் சுவைப்புல உருக்காட்சியையும், குரலில் செப்புதல் செவிப்புல உருக் காட்சியையும் எழுப்பிக் கலவையை உருவாக்குதலைக் காண்கின்றோமன்றோ? பிள்ளைக் கணியமுதே-கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே அள்ளி யணைத்திடவே-என்முன்னே ஆடிவருந் தேனே ஒடி வருகையிலே-கண்ணம்மா! உள்ளங் குளிரு தடி! ஆடித்திரிதல் கண்டால்-உன்னைப்போய் ஆவி தழுவு தடி!" என்ற பாடற்பகுதிகளில் கனியமுது, தேன் இவை சுவைப் புல உருக்காட்சிகளையும்; பேகம் பொற்சித்திரம் செவிப் புல உருக்காட்சியையும்; அள்ளி அணைத்திடல், உள்ளம் 4. கண்ணம்மா.-என் குழந்தை 2, 3 .