பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228. கண்ணன் பாட்டுத்திறன் குளிருதல், ஆவிதழுவுல் இவைநொப்புல உருக்காட்சிகளை யும்; ஆடிவருதல், ஒடிவருதல், ஆடித்திரிதல் இவை இயக்க நிலை உருக்காட்சிகளையும்; இவற்றையெல்லாம் கொண்ட குழந்தை கட்புல உருக்காட்சியையும் எழுப்பி கலவை நிலை உருக்காட்சியை உருவாக்கிப் பாட்டின் சுவையைப் பன்மடங்கு உயர்த்துவதைக் காணலாம். இன்னும், சொல்லும் மழலையிலே-கண்ணம்மா! துன்பங்கள் தீர்த்திடுவாய்! முல்லைச் சிரிப்பாலே-எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய் என்ற இதே பாடற்பகுதியில் சொல்லும் மழலை என்ற தொடர் செவிப்புல உருகாட்சியையும், முல்லைச்சிரிப்பு’ கட்புல உருக்காட்சியையும் எழுப்பி ஒரு அதில் ஒஇ! நிலையை உண்டாக்குவதையும் கண்ணுறுகின்றோம். இப்படிப் பாடல்களில் பல்வேறு இடங்களில் பலவித கலவை நிலை உருக்காட்சிகளைக் கண்டு மகிழலாம். மின்வெட்டுப் போன்ற மணிமொழி உருக்காட்சிகள் : மேற் கண்ட உருக்காட்சிகளைத் தவிர, பல்வேறு இடங்களில் கவிஞரின் சொற்களிலும் சொற்றொடர்களிலும் மின் வெட்டுகள் போன்ற பல்வேறு உருக்காட்சிகள் பாங்குற அமைந்திருப்பதையும் கண்டு மகிழலாம். அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவோம். சந்திரன் என்றொரு பொம்மை-அதில், தண்ணமுதம் போல ஒளி பர ந்தொழு கும்', 'வானத்து மீன்களுண்டு-சிறுமணிகளைப்போல் மின்னி நிறைந்திருக்கும்’, சோலைகள் காவினங்கள்ஆங்கு, சூழ்தரும் பலநிற மணிமலர்கள்', 'தருக்களில் தூங்கிடும் கனிவகைகள்', இளைஞன் பித்தனென்றுலகினர் 5. மேலது.-8.