பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டிலமைந்துள்ள படிமங்கள் 露愛登 தி.து #. பேசிய பேச்சென் நெஞ்சினை அறுத்தது உன்கண்ணில் நீர் வழிந்தால்-என்னெஞ்சில், உதிரங் கொட்டுதடி", ‘ஆசைபெற விழிக்கும் மான்கள் உள்ளம் அஞ்சக் குரல் பழகும் புலிகள்', 'வண்டு விழியினுக்கே-கண்ணன், மையும் கொண்டு தரும்', 'சுட்டும் சுடர்விழி', 'பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால்-தம்முள், பன்னி உபசரணை பேசுவதுண்டோ?’, ‘வ னி லி ட தி ைத யெல்லாம்-இந்த வெண்ணிலா, வந்து தழுவதுபார்!இந்தச் சொற்றொடர்களில் பொதிந்திருக்கும் பல்வேறு வகை உருக்காட்சிகள் படிப்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. கவிதையநுபவம்: நம் உடல் தூண்டல் துலங்கல் முறையில் இயங்குகின்றது. உள்ளமும் அதற்கேற்பத் துலங்குகின்றது. வெளியுலகிலிருந்து துரண்டல்கள் புலன் களைத் (Sensey level) த க்கும்போது, அவற்றிற்கேற்பப் புலன்கள் துலங்குகின்றன. அதாவது, அப்புலன்கள் அத் தூண்டல்களால் கிளர்ச்சியடைகின்றன. அதன்ால் ஏற்படும் உணர்ச்சியை மனம் அநுபவிக்கின்றது. இந்த உணர்ச்சிப் பெருக்கில் உண்டாகும் இன்ப்மேமுருகுணர்ச்சியே-க ைவ ய கு ம். எடுத்துக்காட்டாக மணப்பொருள்கள் நல்கும் மணத்தை நாற்றப்புல நரம்பு கள் வாங்கி, மூளைக்கு அனுப்புகின்றன. மணம் அப் பொருள்கள் தரும் மணத்தை அநுபவிக்கின்றது. எ-டு : ஊதுவத்தியின் மணம். இப்படியே பிற புலன்களின்மூலம் பெறும் தூண்டல்களால் மனம் அந்தந்தப் பொருள்கள் தரும் சுவைகளைப் பெற்று அவற்றில் ஈடுபடுகின்றது. இவ்வாறு வெளியுலகத் தூண்டல்களால் அடிக்கடிமணம் பெறும் அநுபவம் பெருமூளையில் பதிவாகின்றது. உலகை இன்பமயமாகக் கண்டு, உள்ளத்தில் பூரிப்பு அடையவர்கள் கவிஞர்கள். அதற்கு உள்ளத்தில் கனிவு வேண்டும்.