பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 கண்ணன்பாட்டுத் திறன் இ வ் வாறு பெருமூளையில் பதிவாகி யிருக்கும் அநுபவம் கவிதைகளைப் படிக்கும்போது நினைவாற்றலின் காரணமாகத் தூண்டல்களாக (ldeational level) மாறுகின்றன. அவை மூளையிலுள்ள பூத்தண்டு (Thalamus), Glostig33sir@ (Hypo-thalamus) argir னும் புகுதிகளின் மூலமாகப் புலன்களை அடை கின்றன. அப்படி அடையும்ப்ோது அவை.மூளையில் அற்புதமாக அமைந்திருக்கும் நரம்பு அமைப்புகளைத் தூண்டுகின்றன. இதனால் அந் நரம்புகளில் ஏற்படும் இயக்கத்தால் மாங்காய்ச் சுரப்பிகள் (Adrenal glands) போன்ற நாளமிலாச் சுரப்பிகளில் (Duct tess glands) சாறுகளை ஊறச் செய்து குருதியோட்டத்தை மிகுவிக் கின்றன. உடலும் கிளர்ச்சியடைகின்றது. அப்போது கவிதைகளில் வரும் உருக்காட்சிகளைப் புலன்கள் மீண்டும் மனத்தில் தோன்றச் செய்கின்றன. மனம் அக் காட்சி களை அநுபவித்து மகிழ்கின்றது. இத்தகைய முருகுணர் சியைத் தம் முருகியல் நோக்கால் தம்முடைய கவிதை களில் ஏற்றிவைக்கின்றர் கவிஞர்கள். உலக இயல்பிற்குப் அடம்போலிருக்கும் அவர்களுடைய கவிதைகளை நாம் பயிலுங்கால் அதே நோக்கை நாம் பயிற்சியால் பெறு கின்றோம், கவிஞர்கள் உலகப் பொருள்களை அநுபவித்த உணர்ச்சி சுவை வடிவமாக அவர்தம் கவிதைகளில் தேக்கி வைக்கப் பெற்றுளது. அக் கவிதைகளை நாம் பயிலுங்கால் அவற்றிலுள்ள சுவைகளை நம் மனம் அநுபவித்து மகிழ்கின்றது. பாரதியாரின் கண்ணன் பாட்டைப்' பயின்று அநுபவிப்பவர்கள் அவருடைய முருகியல் நோக்கை மானசீகமாகக் கண்டு மகிழலாம்; நம்மிடமும் அந் நோக்கு எழுவதையும் உணர்ந்து மகிழலாம். பாடல்களும் மம்மர் அறுக்கும் மருந்தாக நமக்குக் களிப்பூட்டுவதையும் உணரலாம். பாட்டிலமைந்துள்ள