பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧慧 இன்னன் பாட்டுத்திறன் கடில் அளவிடக் கூடாததாக இருப்பினும், அதனுள் மீன் முதலிய உயிர்கள் தம் விருப்பப்படிப் புகலாமன்றோ? அது போன்று நாமும் சம்பந்த ஞானம் அடியாகக் கிட்டலாம். சம்பந்த ஞானம் அற்ற துரும்பை யன்றோ கடல் கரையிலே ஏறத் தள்ளுகின்றது. ஆயின், இந்தச் சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் ஆசாரிய்னுடைய செயலாக அமைகின்றது. இங்ங்ணம் எம்பெருமானுக்கும், நமக்கும்-பிரமான் மாவுக்கும் சீவான்மாவுக்கும்-உள்ள சம்மந்தம் ஒன்பது வகைப்படும். இந்த ஒன்பது வகை சம்பந்தங்களும் வைன மந்திரங்களில் மூன்றனுள் ஒன்றாகிய திருமந்திரத் தினுள் பெறப்படுகின்றன் என்பது வைணவ சமயக் கோட்பாடு. 'ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். இதில் 'ஓம்', ‘நமோ', 'நாராயணாய என்று மூன்று பதங்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் முதற் பதமாகிய பிரணவம் அ, உ, ம என்ற மூன்று எழுத்து களைக் கொண்டது. இவற்றுள் அகாரம் (!) தந்தைமகன் (பிதா-புத்ர), (2) காப்பாற்றப் படுபவன்காப்பவன் (ரட்சிய-ரட்சக) என்ற சம்பந்தங்களைக் கூறு கின்றது. அகாரம், நாராயண பதத்தின் சுருக்கமாகும். இவ்வகாரம், ஆய' என்னும் நான்காம் வேற்றுமையை (சதுர்த்தியை) இறுதியில் பெற்றுள்ள நாராயணாய' (நாராயண+ ஆய) என்னும் பதத்தின் சுருக்கமாகும். ஆதலின், நாராயண பதத்திலுள்ள வேற்றுமையுருபு இவ் வகாரத்தில் மறைந்து கிடக்கின்றது என்பதை ஊகித்தல் 8. திருமந்திரம், துவயம், சரம சுலோகம் என்பன வைணவமந்திரங்கள்-இவற்றின் விளக்கத்தை பிள்ளையுலக ஆசிரியர் அருளிய முட்சுபடி என்ற நூலில் காண்க. டாக்டர் ந. சுப்புரெட்டியாரின் முத்தி நெறி' என்ற நூலிலும் இவை கடித வடிவில் தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன,