பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனுடன் தமது உறவுகள் 望$ வேண்டும். இதனை லுப்த சதுர்த்தி என்று கூறுவர் வடமொழியாளர். இந்த லுப்த சதுர்த்தியாகிய ஆய’ என்பது (3) அடிமை-ஆண்டான் (சேஷ-சேஷி) என்ற சம்பந்தத்தைக் கூறுகின்றது. உகாரம் (4) நாயகன்நாயகி : (பரித்ரு-சார்யா) சம்பந்தத்தைச் சொல்.இ கின்றது. மகாரம் (5) அறிபவன்-அறியப்படும் பொருள் (ஜ்ஞாத்ரு-ஜ்ளுேய) என்ற சம்பந்தத்தைக் குறிப்பிடு கின்றது. நம்ஸ்ஸல் (6) சொத்து-சொத்துக்குரியவன் (ஸ்வஸ்வாமி) என்ற சம்பந்தத்தை உரைக்கின்றது. நார பதம் (7) உடல்-உயிரையுடையவன்(சரீர-சரீரி) சம்பந் தத்தைக் கூறுகின்றது. அயன பதம் (8) தாங்குகிறவன்தாங்கப்படும் பொருள் (ஆதார-ஆதேய) சம்பந்தத்தைத் தெரிவிக்கின்றது, ஆய பதம் (9) போகத்தை அனுபவிக் கிறவன்-போகப் பொருள் (போக்த்ரு-போக்கியம்) என்ற சம்பந்தத்தைச் சொல்லுகின்றது. ஆக, திருமந்திரம் இவ்வாறு ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள ஒன்பது வித உறவுமுறைகளைக் கூறித் தலைக்கட்டுகின்றது. ஓர் ஆன்மாவுக்கும் மற்றோர் ஆன்மாவிற்கும் கர்மம் காரண மாக நேரிடும் தந்தை-மகன்’ போன்ற உறவுகள் அக் கரிமத்தின் தொடர்பு நீங்கும்போதெல்லாம் மாறிவிடுதல் போல் நீங்காமல், குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்று ஆண்டாள் கூறுவதுபோல், இந்த ஒன்பது வகை சம்பந்தங்கள் என்றும் அழியாதிருக்கும். இந்த உறவு முறைகளைப் பிள்ளை உலக ஆசிரியர் அருளியுள்ள கவவித 9. திருப். 28