பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 கண்ணன் பாட்டுத்திறன் சம்யக்தம்' என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெற் துள்ளது. இந்த உறவு முறைகளை ஆழ்வாரி பாசுரங் களிலும் காணலாம், கண்ணன் பாட்டு என்றதொரு பகுதியில் 23 பாடல் கள் உள்ளன. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பாசுரங்களின் அது சந்தானம் இப் பாடல்கள் முகிழ்ப்பதற்குப் பாரதிக்குக் கைகொடுத்து உதவியுள்ளது என்ற வ. வெ. சு. அய்யர் கருதுவது' முற்றிலும் ஒப்புக்கொள்ளத் தக்கதாகவே உள்ளது. இப் பாட்டின் முதற்ப்திப்பின் முகவுரையில் நெல்லையப்ப பிள்ளையவர்கள் 'பாரதியாருக்குக் கண்ண பிரான்மீதுள்ள அதிதீவிர பக்தி காரணமாக இந்நூலி லுள்ள பாடல்கள் வெளியாயின’ என்று கூறியிருப்ப திலும் உண்மை இல்லாமல் இல்லை. பெரியாழ்வாரின் கவிதையின் அழகு அவருடைய சமய வேட்கையிலிருந்தும் ஆழ்ந்த பக்தியிலிருந்தும் ஒளி பெற்றுள்ளது; இவர்தம் பக்திச் சுவை ஆழ்ந்த அநுபூதி நிலையைச் சார்ந்தது. பொன்னைக் கொண்டு உரைகல்மீதே நிறம் எழ உரைத்தாற்போல உன்னைக் கொண்டுஎன் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன் உன்னைக் கொண்டு என்னுள்வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் ே என்றும், 10. பதினெட்டு இரகசிய நூல்களில் இஃது ஒன்று. 11. க ண் ண ன் பா ட் டு-இரண்டாம் பதிப்பின் முன்னுரை. 12. பெரியா. திரு. 5. 4:5