பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனுடன் நமது உறவுகள் j 5 உன்னுடைய விக்கிரமம் ஒன்றுஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி எழுதிக்கொண்டேன்’ (விக்கிரமம் - வீரச்செயல்கள்.) என்றும், பனிக்கடலில் பள்ளிக்கோளைப் பழகவிட்டு ஓடிவந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ!' என்றும் கூறுவதில் இந் நிலையைக் காணலாம். ஆனால், பாரதியின் பக்திச்சுவை இந்நிலையைச் சார்ந்ததல்ல; அவருடைய உணர்ச்சி கவிதை ஆற்றலினின்றும் கனிந் துள்ளது. இந்த இயலில் தொடக்கத்தில் குறிப்பிட்ட சம்பந்த ஞானம் இவருக்கு வழிகாட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தவிர, இஷ்ட தெய்வத்தை-வழிபடு கடவுளைப்-பல்வேறு பாவனை களால் வழிபடலாம் என்று நம் நாட்டு பக்திப் பனுவல்கள் கூறுகின்றன.ஆழ்வார் பாசுரங்களிலும், எம்பெருமானைத் தாய், தந்தை, குரு, தெய்வம் என்று பேசப்பெற்றிருப் பதையும் காணலாம். பாரதியாரும் இவற்றையெல்லாம் மனத்திற்கொண்டு கண்ணனைத் தந்தையாகவும் தாயாக வும், தோழனாகவும், சீடனாகவும், அரசனாகவும், காதலி யாகவும், காதலனாகவும், சற்குருவாகவும், தெய்வமாகவும் பாவித்துப் பாடியுள்ளார் என்று கூறுவதில் இருவேறு கருத்திற்கு இடம் இல்லை. இனி வரும் இயல்களில் இப் பாடல்களை ஆராய்வோம். ஒரு சில பாடல்களில் வடி மொழி இலக்கணத்தை யொட்டி ரஸம் (சுவை) பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகளையும் விளக்குவோம். T3. மேலது 5. 4:6 4. மேலது 5, 4:9