பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 سـنة للاتِي ரஸத்தைப்பற்றி ஒரு சிறு விளக்கம் உலகப் பொருள்களைக் காண்பது ஒரு நிலை; அவற் றைக் கண்டு இன்புறுவது மற்றொரு நிலை. ஒவ்வொரு வரும் பொருள்களைக் கண்டு மகிழ்வதற்கும், மகிழாது இருப்பதற்கும் அவரவருடைய மன நிலையே காரண மாகும். மனத்தின் போக்கும் ஒரு நிலையிலிருப்பதில்லை. அஃது இன்பமுற்றிருக்கும்போது உலகமே இன்பமய மாகத் தோன்றும்; துன்பமுற்றிருக்கும்பொழுது உலகம் துன்பமயமாகக் காட்சியளிக்கும். ஆனால் மனம் இன்பத் திலும் துன்பத்திலும் நிலைத்திருப்பதில்லை! ஆது பொருள்களின் நிலையைப் புறக்கணித்து இன்ப துன்பங் களை அநுபவிக்கின்றது. இவ்வாறு மனம் தொன்று தொட்டு எத்தனையோ பொருள்களை ஆநுபவித்திருக் கின்றது; மனம் அப்பொருள்களை அதுபவிக்கின்ற பொழுது அஃது அநுபவித்தவாறு அப்பொருள்கள் தமது உருவத்தை நம் மனத்தில் செதுக்கிவிட்டுப் போகின்றன. பிறகு மனம் மீண்டும் அப் பொருள்களைக் கான நேரிடுங் கால் அவை முன் அநுபவித்த-ககம் அல்லது துக்கம்உணர்ச்சியைத் தட்டி எழுப்புகின்றன. இவ்வாறு மனத்தில் செதுக்குண்டிருக்கும் உணர்ச்சியைத்தான் அறிஞர்கள் வாஸ்னை என்று கூறுகின்றனர். வெளியில் கொருள்களைக் காணும்பொழுது உள்ளே உறங்கிக் கிடக்கும் ஆப் பொருள்