பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்த்தைப் பற்றி ஒரு சிறு விளக்கம் | ? களைப் பற்றிய வாலனை மலருகின்றது. அவ் வாலனைக் கேற்றவாறு நாம் உலகப் பொருள்களை நல்லவை என்றும் தீயவை என்றும் கொள்ளுகின்றோம். எல்லாவற்தையும் இன்பமாக உணரும் நிலை மனத்திற்குக் கிட்டிவிட்டால் அது பெறற்கரிய பேறாகும். அந் நிலைகொண்ட மனம் வாய்க்கப் பெற்றவனே கவிஞன். யாவற்றையும் ரஸ்மாய்க் கண்டு உணரும் உள்ளத்தையுடையவனே சிறந்த கவிஞன் என்பது அறிஞர் கருத்தாகும். இறையதுபவத்திற்கு அடுத்த நிலையில் வைத் தெண்ணக்கூடியது இலக்கியச் சுவையாகும். இலக்கியச் சுவையில் ஈடுபட்டு மனத்தை அதில் பறிகொடுத்த புலவர் ஒருவர், இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்று பேசுகின்றார். தம் வாழ்நாள் முழுவதும் தமிழ் இலக்கியத் தேனை மாந்திய பாவேந்தர். கன்னற் பொருள் தரும் தமிழே நீஓர் பூக்காடு; நானோர் தும்பி என்று தம் அநுபவத்தை வெளியிடுகின்றார். நாம் ஆழ்ந்து சித்தித்தால் சுவை (ரலம்) என்பது ஒரு புதிய கருத்தன்று என்பது தெளிவாகும். வண்ணப்படத் தில் வரையப்பெற்ற பன்றி ஒன்று சேற்றில் மூழ்கி வெளி யேறிய தோற்றத்தை அப்படியே ஒவியர் காட்டுவதாக வைத்துக்கொள்வோம். ஆ ைத ப் பார்க்கும் நாம் 1. தமிழ்விடு தூது-கண்ணி-151 2. அழகின் சிரிப்பு-தமிழ்-செய். 10

  1. معسقم، T لسة « sتة