பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & கண்ணன் பாட்டுத்திறன் அதனையே பன்முறை உற்று நோக்கி ஒருவித இன்பத்தை அடைவோம் அல்லவா? ஆயினும், பன்றி ஒன்று சேற்றில் புரண்டு எழுந்து, சேறும் அழுக்குமாக நம் எதிரில் தோன்றினால் நாம் அக்காட்சியைக் கண்டு இன்பம் அடை கின்றோமா? இல்லையன்றோ? சில சமயம் அக்காட்சியைக் காணவும் சகியாமல் அருவருப்புடன் முகத்தைக்கூட வேறு பக்கமாகத் திருப்பிக் கொள்ளுகின்றோமன்றோ? அதுவும் சேற்று நாற்றமும் வீசத்தொடங்கினால் சொல்ல வேண்டி, யதில்லை, இதிலிருந்து பெறப்படும் உண்மை என்ன? கலை நமக்கு ஊட்டுவது ஒர் இன்ப உணர்ச்சியின் விளைவு என்பதை நாம் அறிகின்றோ மன்றோ? இதனையே இலக்கண நூலாரி சுவை (ாலம்) என்று பெயரிட்டுள்ளனர். சுவையை ஒன்பது வகையாகப் பிரித்தும் காட்டி யுள்ளனர். 'வரலம் என்று பேசப்படுவதை நாம் கேள்வி யுற்றிருக்கின்றோ மல்லவா? இந்த ஒன்பதிலும் அவர்கள் எல்லாவித உணர்ச்சிகளின் விளைவுகளையுமே அடக்கி யிருப்பதுதான் வியப்பினும் வியப்பாகும். நம்மவர்கட்கு இதில் சிறிதேனும் சிரமம் இல்லை. ஏனெனில், இசையினை ஏழே சுரத்தின் சேர்க்கையாக உணர்த்திய ஆதிசயத்தை எந்த நாட்டில் காணமுடியும்? பாரதியார் கண்ணன் பாட்டின் சிலவற்றில் ரஸங் களைப்பற்றிய குறிப்புகள் தந்துள்ளார். இவர் இக்குறிப்பு களை வடநூலார் கொள்கையினை யொட்டித் தந்துள் ளார்போல் தோன்றுகின்றது. அவர் பாடல்கள் அனைத் தையும் ஆழ்ந்து கற்றால் சங்க இலக்கியங்களையோ, தொல்காப்பியத்தையோ எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. காசியில் வாழ்ந்த காலத்துப் பாரதியார் வடமொழியை ஆ ழ் ந் து கற்றிருத்தல் வேண்டும். வடமொழி இலக்கியங்களை நன்கு கவைத்திருத்தல்; வேண்டும், ஆகவே, ரஸம் பற்றி அவர் தந்துள்ள குறிப்பு