பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கண்ணன் பாட்டுத்திறன் உணர்வுகள்-இது நிலை பேறில்லாத பாவம்) என்றும் வழங்கப் பெறும். அஃதாவது: காரணம்-விபாவம் காரியம்-அனுபாவம் துணைக்காரியம்-சஞ்சாரிபாவம் என்று வழங்கும். இந்த விபாவ அனுபாவங்களால் வெளிப்படுகின்ற ஸ்தாயி பாவமே ஏலம் அல்லது சுவை எனப் பெயர் பெறும். மேற்கூறிய விபாவம் இருவகைப்படும். அவை ஆலம்பன வியாவம்' என்றும், உத்தீபன விபாவம்' என்றும் பெயர்களைப் பெறும். ஒருவரின் காதல் முதலிய உள்ள நிகழ்ச்சிக்கு எப்பொருளின் சார்பு காரணமோ அப் பொருள் அதற்கு ஆலம்பனம்’ எனப்படும். எவ்வாறெனின் தலைவியின் உள்ளத்துள்ள காதலுக்குத் தலைவனும், தலைவனின் உள்ளத்துள்ள காதலுக்குத் தலைவியும் 'ஆலம்பன விபாவம் ஆகும். அங்கனமே, தலைவியின் உள்ளத்துள்ள சோகத்திற்குத் தலைவனின் மரணமும் தலைவனின் உள்ளத்துள்ள சோகத்திற்குத் தலைவியின் மரணமும், ஆலம்பன விபாவம் ஆகும் என அறிதல் வேண்டும். மேற்கூறியவாறு தோன்றிய காதல் முதலிய வற்றை வளர்த்து விளங்கச் செய்வது உத்தீபன வியாவம்' எனப்படும். அவர்களுடைய உருவின் சிறப்பு, குணநலன், செயல், அணிகலன் முதலியனவும், தென்றல், நிலா, கடலொலி முதலியனவும் உத்தீபன விபாவம் ஆகும். 4. ஆலம்பன விபாவம், ஆலம்பனம் பற்றுக்கோடு; விபாவம் - தூண்டல்; அதாவது, பற்றுக்கோடாய தூண்டல்: 5. உத்தீபன விபாவம் : உத்தீபனம் - கிளர்த்தல்; விபாவம் - தாண்டல்; அதாவது, கிளர்த்தும் தூண்டல்.