பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸத்தைப்பற்றி ஒரு சிறு விளக்கம் 器赢 இவற்றையே தொல்காப்பியர் செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு முதலியனவாகக் குறிப்பிடுவர்." இனி, காரியமாகிய அனுபாவமும் இரண்டு வகைப் படும். ஒன்று அகத்தது. மற்றொன்று புறத்தது. அந்தக் கரணத்தைச் சார்ந்தனவாகிய ஸ்தம்பம், பிரளயம் முதலியவை முதற் பிரிவிற்குரியவை; அவை சாத்வீக பாவம் எனப்படும். கடைக்கண் நோக்குதல் முதலிய செப் கைகள் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவை. காதல் முதலிய ஸ்தாயி பாவங்களைத் துணைக் காரணமாய் நின்று வளர்க்கின்ற நலிவு, நினைவு. விரைவு முதலியன சஞ்சாகி பாவம் எனப்படும்; இதனை வியபிசாரி பாவம் என்று கூறு தலும் உண்டு. இஃது அரசனைப் பின்தொடரும் ஏவல? 6. மெய்ப் - நூற்பா 3 முதல் முடிய தந்தான்காகப் பிரித்துக் கூறியவை. ஆசிரியர் தொல்க்ாப்பிய்ன்ார் கூறும் முதற்பொருளும் கருப்பொருளும் உத்தீபன விபாவம் ஆகும். இவை வரும் சங்கப்பாடல்களை நோக்கி இதனை அறிய ö幕r鑫。 7. இது எட்டுவகைப்படும் : 1. ஸ்தம்பம் செயலற்று நிற்றல், 2. பிரளயம் - மூர்ச்சித்தல்: 3. ரோமாஞ்ச்ம்ம யிர் க் கூ ச்.ெ ச றி த ல் , 4. சுவேதம் வியர்த்தல்; 5. வை.வர்ண்யம் - நிறமாற்றம்; 6. வேடது - உடல் நடுக்கம்; 7. அஸ்ரு . கண்ணிர் உகுத்தல்; 8, வைஸ்வர்யம் . குரல் மாறுபாடு, இந்த மெய்க்குறிகளை விறல் அல்லது சத்துவம் என்று வழங்குவர் இலக்கணநூலார். இது பத்துவகைப்படும். அவை மெய்ம்மயிர்சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், நடுக்கமெய்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரல் சிதைவு என்பவனாகும். அவ்விறல் சுவை களிலே மனக்குறிப்பு உளதாய வழி உடம்பிலே தோற்றும்; உடம்பினும் முகத்து மிகத்தோற்றும்; முகத்தின் மிகத் தோற்றும் கண்களில்; கண்ணின் மிகத்தோற்றும் கண்ணின் கடையகத்து. இவை எட்டென்பது வடநூலார் மதம், (சிலப் பக் 84. உ. வே. சா. அய்யர் பதிப்பு).