பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱露 கண்ணன் பாட்டுத்திறன் போலவும், கடலில் பிறக்கும் அலைகள் போலவும் ஸ்தாயி பாவங்களைப் புலப்படுத்தி நிற்கும். தொல்காப்பியர் கூறும் புதுமுகம் புரிதல் முதலியனவும், கூழைவிரித்தல்" முதலிய வும் அனுபாவம் என்ற வகையினுள் அடங்கும். ஒரு நாடகம் நடிக்கும்போது அவையிலுள்ளோர் தலைவன் தலைவியரின் செயல்கள் யாவற்றையும் கண்டு களித்து மெய்மறந்து ஆனந்தக் கண்ணிக் பெருக்குவர். அதற்குக் காரணம் அவையோர் அந்த நடிப்பில் உண்டான சுவையை உணர்ந்ததனால் ஆகும் என்பது அறியத்தக்கது. அவ்வாறே கவிஞன் ஒருவன் தன் காவியத்தில் தலைவன் தலைவியரை வருணிக்க, அவற்றை உணர்ந்து படிப்போர் சுவையை உட்கொண்டு மகிழ்வர். ஆகவே, சுவையை அநுபவிக்க விபாவம், அனுபாவம், முதலியன இன்றியமை யாதவை என்பது பெறப்படுகிறது. இவ்வாறு தோன்றி, தெளிவாகி, வளர்ந்து வருகின்ற காதல் முதலிய பாவங்கட்கு நல்லறிஞர் உள்ளத்தில் உண் டாகும் பிரதி பிம்ப்மே ரஸம் அல்லது சுவை” என்று கொள்ளல் வேண்டும். துரிய வெண்ணிறத்தனவாகிய ஞாயிற்றின் க தி ரீ க ள் செந்நிறக் கண்ணாடியில் படும்போது அவற்றிற்குச் செந்நிறம் உண்டாதல்போன்று காரணம் முதலியவற்றிற்கும் காதல் முதலியவற்றிற்கும் பிரதிபலிக்கச் செய்யும் பொருளின் தன்மையை அனுசரித் துச் சில சிறப்பான வேறுபாடுகள் உண்டாகின்றன அதனால் காரணம் முதலியவை விபாவம் முதலான நிலை யில் இன்ன மனிதர், இன்ன நேரம், இன்ன இடம் இவை போன்ற சிறப்பியல்புகளை விட்டுப் பொதுவாய வடிவில் அமைகின்றன. அவ்வாறே ஸ்தாயி பாவங்களுள் சோகம் ப்ெ. நூற். 3. 9. டிெ நூற் 14,