பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்த்தைப்பற்றி ஒரு சிறு விளக்கம் 2 7 கவிதை ஆனந்தக் கணிப்படைந்த உள்ளத்திலே உரு வெடுக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். ரலங்களின் பரிணாமம் : இதுபற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. மேற்கூறிய ஒன்பது சுவைகளுள் கருணம் ஒன்றுதான் பல்வேறு ரஸங்களாகப் பரிணமிக்கின்றது என்பர் ஒரு சாரார். அவர்கள் கூறுவது: கருணம் ஒன்றுதான் உலகின் அடிப்படை உண்மை நிலை யில் அடங்கிக் கிடக்கின்றது. ஆன்மாவும் உலகும் பின்னிக் கிடக்கின்றன. ஆன்மாவின் கூறு இன்பமாகவும், உலகின் கூறு துன்பமாகவும் உள்ளன. மனத்தின் உருக்கம் மட்டி இம் இல்லாவிடில், அங்கு ரளத்திற்கே இடம் இல்லை. உருக்கம் கருணத்தில்தான் தலையெடுக்கும்; ஆதலின் கருணமே சிறந்த ரஸம். ஆகவே, ஏதாவது ரஸ்ம் நமது அதுபவத்தில் தோற்ற மளிக்க வேண்டு மானால், நம் மனம் உருகவேண்டும். மனத்தை உருக வைக்கும் சாதனத்தையே கருணத்தின் உறுப் பாக நாம் ஏற்கின்றோம். ஆகவே, கருணம் ஒன்று தான் ரஸம் என்றும், அது பற்பல காரணங்களின் சேர்க் கையால் பல்வேறு ரஸங்களாகக் காட்சி அளிக்கலாம் என்றும் பவபூதி என்ற வடமொழிக் கவிஞர் தம் உத்தர ராம சரிதம் என்னும் நாடகத்தில் குறிப்பிடுவர். மற்றொரு சாரார் சிருங்காரம் ஒன்றே சிறந்தது என்றும், அதிலிருந்தே ஏனையவை தோன்றின என்றும் கூறுவர். உவமை யென்னும் தவலரும் கூத்தி பல் வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கில் கவினுறத் தோன்றி யாப்பறி புலவர் இதயம் - நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே" 10. செந்தமிழ் - தொகுதி. 7 : பக். 144