பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரளத்தைப்பற்றி ஒரு சிறு விளக்கம் 39 ஆகாயம் என்ற நான்கும் கலந்துதான் இருக்கும்: மற்றவை இருந்த போதிலும் பூமியின் கூறு அதில் அதிக மாக இருப்பதால் அதனைப் பூமி என வழங்குகின்றோம். அவ்விதமே, நாம் சுவைகளின் வேறுபாட்டை உணர வேண்டும். பல இடையூறுகள் இருந்த போதிலும் அவற் றைப் பொருட்படுத்தாமல் ஒரே நோக்கமாக துஷ்யந் தனையே நாடிய சகுந்தலையின் மன உறுதியை வீரத்தின் கூறாகக் கொள்ளலாம். ஆனால், கவிஞன் அதைக் காதலின் கூறாகக் கொண்டுள்ளான். அவ்வாறே சிறை யிருந்த செல்வியின் மன உறுதியை வீரமாகக் கொள்ளலா மேலும், காதலாகக் கொள்வதே மரபு. இவ்வாறே, இசைக் கலையிலுள்ள ஏழு சுரங்கள் ஒவ்வொன்றிலும் மற்ற ஆறு சுரங்கங்கள் கலந்திருப்பது நமக்குத் தெரியா விட்டாலும் இசையறிஞர்கள் அறிந்து நமக்கும் எடுத்துக் காட்டுவர். கதிரவன் ஒளியிலுள்ள வெண்மை நிறத்தில், ஏழு நிறங்கள் கலந்திருப்பதை இயற்பியல் அறிஞர்கள் (Physicists) எடுத்துக் காட்டியுள்ளனர். எனவே, எதனை யும் ஆராய்ந்து பார்ப்பவர்கட்கு ஒற்றுமையும் தோன்றும்; வேற்றுமையும் புலனாகும். சுவைகட்கு அடிப்படையாக வுள்ள உணர்ச்சிகளைக் கொண்டு ஆராசம்போது ஒற்றுமை யும் காணப்பெறும்; வேற்றுமையுங் காட்சி அளிக்கும். வேற்றுமையைக் கொண்டுதான் உணர்ச்சிகள் ஒன்பதாகப் பிரிக்கப்பெற்றன என்பதை நாம் அறிதல் வேண்டும். மேற் கூறப்பெற்ற ஒன்பது பாவங்களும் எல்லா உயிரி களிடத்தும் பற்றியிருக்கும். ஆனல், சிலருடைய மனோ விருத்திகள் பல பிறப்புகளிலுள்ள வாஸ்னை மிகுதியால் சில பாவங்களில் மிக்குச் செல்லும்; சிலவற்றில் குறைந்து காணப் பெறும். அதனால் இவை அறவே இல்லாதிருக்கும் என்று எண்ணுதல் கூடாது. வீரத்திற்குக் காரணமாக வுள்ள உற்சாகம், பயானகத்திற்குக் காரணமாகிய