பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

證鬱 கண்ணன் பாட்டுத் திறன் அச்சம், ரெளத்திரத்திற்குக் காரணமாகிய குரோதம் ஆகியவை எல்லா உயிர்களிடத்தும் மிகுதியாகக் காணப் பெறாமைக்குக் காரணம் வழிவழி வரும் வாஸ் னைகளின் குறைவே என்று கருதவேண்டும். சிருங் காரத்திற்குக் காரணமாகிய காதல் எல்லா உயிர்களிடத் தும் மிக்குக் காணப்படுவதற்குக் காரணம், வழிவழி வரும் வாஸ்னையின் மிகுதியே என்று கொள்ளவேண்டும். ஆதலின், இவ்வெல்லாச் சுவைகளையும் எல்லா உயிர் களும் ஒரே பிறப்பில் அநுபவித்தல் அரிதாகவே உள்ளது. இன்னும் ஒரு சிலர் பக்தி, வாத்சல்யம் முதலியவற் றையும் சுவைகளாகக் கருதுகின்றனர். ஜகந்நாத பண்டிதர் என்ற அறிஞர் பக்தியை மிகவும் பெருமைப் படுத்திப் பேசு கின்றார் : கிருஷ்ணர்' என்ற இரண்டு எழுத்துகளின் இனிமையைக் கண்டதுண்டா?” என்று வினவுகின்ருர், பக்தி என்பது சிறந்த ரஸம் அல்லது மனோநிலை. அதற்கு உறுப்பாகவே மற்ற ரஸங்கள் நிற்கின்றன என்று ஜயதேவர், விலா சுகர் முதலிய மாமுனிவர்களாகிய கவிஞர்கள் காவியம் எழுதி மெய்ப்பித்துள்ளனர். இவர்களிடம் ஈடுபட்டோர் சிறிது மனமிரங்கி "பத்தாவது உணர்ச்சி பாகன் பக்தியை ஏன் கொள்ளக் கூடாது?’ என்று பிடிவாதமும் செய்வர். இலக்கண ஆசிரியர்கள் நன்கு ஆய்ந்து பக்தி, வாத்சல்யம் போன்றவற்றை பாவமே என்று அறுதியிட்டுள்ளனர். பக்தி ரஸம் என வழங்குவது உபசாரமே யன்றிக் காப்பியச் சுவை பற்றிச் சிறந்த நூல் களில் வழங்குதல் இல்லை. 'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ!' என்று சேக்கிழார் மற்றோர் எழுத்தாகவும் அமையும். 12. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்-தாலப்பருவம் . 8