பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்த்தைப் பற்றி ஒரு சிறு விளக்கம் 3 # பெருமானைப் புலவர்கள் குறிப்பிடுவதையும் உபசார வழக்காகவே கொள்ளுதல் வேண்டும். பக்தி என்ற பாவம் சிருங்காரத்தில் அடங்கும். பகவானிடத்தில் செலுத்தும் அன்பு, பக்தி; குழந்தைகளிடம் செலுத்தும் அன்பு, வாதி சல்யம்; மனைவியிடத்தில் செலுத்தும் அன்பு, காதல் இவ்வாறு அன்பு இட வேறுபாட்டிற் கேற்பப் புதுப்பெயர் களைப் பெறுகின்றது என்பதை நாம் அறிதல் வேண்டும். இப் பாவங்கள் யாவும் சிருங்காரச் சுவையுள் அடங்கும். உலக நிகழ்ச்சிகள் சுவையன்று : இவ்விடத்தில் ஒரு முக்கிய உண்மையை மனத்திலிருத்துதல் வேண்டும். உலகியலில் நிகழும் செயல்களால் உண்டாகும் இன் பத்ைைத ரளம் என்று கொள்ளுதல் பொருந்தாது. காரணம், ஒரு சுவைக்குக் கூறும் இலக்கணம் எல்லாவற் நிற்கும் பொருந்துவதில்லை. உலகியற் செயல்களுள் நகை, காதல் போன்றவற்றில் இன்பம் உண்டாதல்போல், அழுகை, இழிவரல், அச்சம், வெகுளி முதலியவற்றில் இன்பம் உளதாதல் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இதனால்தான் சுவை இலக்கண நூலார் உலகியலின்பத்தைச் சுவை என்று கொள்ளாமல் நாடகத்திலாவது காவியத்திலாவது அச்செயல் நிகழும் பொழுது அவற்றைக் காண்டலும் கேட்டலும் செய்யும் நல்லறிவாளருள்ளத்தில் விபாவம் முதலியவற்றால் உண் டாகும் சுவையையே ரஸிம் என்று அறுதியிட்டனர். உலகில் ஒரு தாய் தன் இளமகன் இறந்ததைக் குறித்து அழுதலைக் கேட்குங்கால் நமக்குத் துயரம் உண்டாகின்றது. ஆனால் மேகநாதன் இறந்து ட் ட பே து இராவணன், மண்டோதரி புலம்புவதாகவுள்ள பாக்களைப் படிக்கக் கேட்கு மிடத்து அளவிலா மகிழ்ச்சி யுண்டாகின்றது. அவலத்திலும் இன்பத்தைக் காண்பதால்தான் அப் பாக் களைப் பன்முறை கேட்டும் படித்தும் இன்புறுகின்றோம்.