பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-4 கண்ணன் பிறப்பு ஒரு சமயம் பெரியாழ்வார் சீவில்லிப்புத்துரி விருந்து தம் தோழர் செல்வ நம்பியைப் பார்க்க திருக் கோட்டியூர் வருகின்றார். அங்கே கோயில்கொண்டிருக்கும் சொமிய நாராயணப் பெருமானைத் தரிசிக்கின்றார். அந்தச் சமயம் திருக்கோயிலில் பூரீ ஜயந்தி விழா நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது. செளமிய நாராயணனின் திருமேனி கிருஷ்ண்ாவதாரத்தை நினைவுறுத்துகின்றது. உடனே ஆழ்வாரின் மனம்-சிந்தை-பாவனை யுலகில் திளைக்கத் தொடங்குகின்றது. குழந்தை மனமும், பருவ மங்கையரின் மனமும் மட்டிலுந்தான் பாவனை யுலகில் திளைக்கும் என்பதில்லை. பக்தர்களின் மனமும் இந்தப் பாவனை யுலகில் புகுவதுண்டு. இந்தப் பாவனை யுலகில் நடைபெறும் செயல்களைப் புரிந்து கொள்வது சிரமம்: மிகமிகச் சிரமம். பெரியாழ்வாரின் மனக்கண்ணுக்கு அந்தத் திருக் கோயில் நந்தகோபனின் அரண்மனையாகவும், திருக் கோட்டியூர் ஆய்ப்பாடியாகவும் மாறிவிடுகின்றன. செளமிய நாராயணன் ஆயர்கட்கும் ஆய்ச்சியர்கட்கு மிடையே குழந்தைக் கண்ணனாகக் காட்சி தருகின்றான். பெரியாழ்வார் கண்ணன் பிறப்புக் காட்சிகளைக் கண்டு ஆகிய பாசுரங்களாக வழங்குகின்றார். இப்படி வழங்கும்