பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் பிறப்பு 霹器 போது தம்மை யசோதைப் பிராட்டியாகவும் மாற்றிக் கொள்ளுகின்றார். ஆனந்தம் அதிகரித்து விடுகின்றது ஆய்ப்பாடி மக்களுக்கு. ஆய்ப்பாடி ஏதோ ஒரு சிறப்பான அன்புச் சுழலில் ஆகப்பட்டது போலக் கிறுகிறுத்துப் போய்விடுகின்றது. வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் துTவிடக் கண்ணன் முற்றம் கலந்தளறு ஆயிற்றே. * என்று காசுரங்கள் அற்புதமாகப் பிறக்கின்றன. இந்தப் பாசுரங்களைப் பாரதியார் படித்து அநுபவித்திருக்க வேண்டும். திருக்கோயில்களிலும் திருமாளிகைகளிலும் கண்ணன் பிறப்பு விழா நிகழ்ச்சிகளைக் கண்ணாரக் கண்டு ஆநுபவித்திருக்க வேண்டும். இன்று வைணவர் இல்லங் களிலும் மட்டுமல்ல, ஸ்மார்த்தர் இல்லங்களிலும் கண்ணன் பிறப்பு விழா கோலங் கொள்வதைப் போல் பாரதியார் இல்லத்திலும், அக்கம்பக்கத்து இல்லங்களிலும் இவ் விழா கோலங் கொண்டதை அவர் நேரில் கண்டு களித்திருக்க வேண்டும். பெரியாழ்வாரின் உணர்ச்சி பாரதியைப் பற்றுகின்றது. கவிஞர் பாடுகின்றார் : கண்ணன் பிறந்தான்-எங்கள் கண்ணன் பிறந்தான்-இந்தக் காற்றதை யெட்டுத் திசையிலும் கூறிடும். திண்ண முடையான்-மணி வண்ண முடையான்-உயர் தேவர் தலைவன் புவியிசைத் தோன்றினன்." 1. பெரியா. திரு 1. 1: 1 2. தோத்திரப்பாடல்கள் - 49. கண்ணன் பிறப்பு.1