பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

బీ கண்ணன் பாட்டுத்திறன் தம் உணர்ச்சிக்குப் போக்குவீடாகப் பாடல்கள் ஆமை கின்றன. ஆய்ப்பாடி மக்கள் கண்ணன் பிறப்பால் தாமாகவே குதுகலித்தாடுகின்றனர்; தமது குலத்தில் தம் காலத்தில் கண்ணன் பிறந்தது அவர்களிடையே மகிழ்ச்சி பொங்கி எழச்செய்கின்றது. பெரியாழ்வார் யசோதையாக மாறி இக் காட்சிகளைத் திருக்கோட்டியூரில் நடைபெறுப்வை யாகக் காட்டுகின்றார். பாரதியாரோ கண்ணன் பிறப்பால் தாம் பெற்ற மகிழ்ச்சியை, எக்களிப்பை, தம்மைச் சுற்றியுள்ளாரிடம் காட்டுகின்றார். பண்ணை யிசைப்பீர்-நெஞ்சில் புண்ணை யொழிப்பீர்-இந்தப் பாரினி லேதுயர் நீங்கிடும் என்றிதை எண்ணிடைக் கொள்வீர்-நன்கு கண்ணை விழிப்பீர்-இனி ஏதுங் குறைவில்லை வேதம்; துணையுண்டு, என்ற பாடலால் அவர்களிடம் ஊக்கமும் நம்பிக்கையும் பிறக்கச் செய்கின்றார். கண்ணனின் திருமேனி அழகை திருவடி தொடங்கித் திருமுடி அளவாக அநுபவிக்கின்றார் யசோதைப் பிராட்டியின் கண்களாலேயே மற்றப் பெண்களுக்கு அந்தக் குழந்தையைக் காட்ட விரும்பிய யசோதைபோல், ஆழ்வாரும் தாம் கண்ட அழியா அழகென்னும் தத்து வத்தை அநுபவிக்கத் தகுதியினரான பிறருக்கும் காணிரே! வந்து காணிரே என்று காட்ட விரும்பு கின்றார்.