பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை பேராசிரியர் டாக்டர் கா. மீனாட்சி சுந்தரம் (கல்லூரிக் கல்வி இயக்குநர் (பொறுப்பு), சென்னை-600 006.) 'டாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலித்திடும் மகாகவி பாரதியாரைப்பற்றிப் பட்டி தொட்டியும் இன்று அறியும். உலகப் புலவராக, இன்று, உலகம் அந்த மாமேதைக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடுகிறது. பேராசிரியர் டாக்டர் ந. கப்பு ரெட்டியார் தானும் தனித்து நின்று பாரதியைக் கண்ணன் பாட்டுத்திறன் என்ற நூல்வழி தன் பற்றையும் பாசத்தையும் காட்டிப் போற்றுகிறார். முல்லை, குழல், கண்ணன் இம் மூன்றும் மணம், இனிமை, அழகு ஆகியவற்றைத் தமிழகத்தில் பரப்பிக்கொண்டு ஒளி விட்டுக்கொண்டிருக்கும் சொற்களாம். முல்லை நிலத்தில் குழலிசையை மாயோன் பரப்புவதைத் தமிழ்க் கவிஞர்கள் சுவைத்துச் சுவைத்து உருகி உருகி உருக்கமாகப் பாடி யுள்ளார்கள். ஆயினும், அவரவர் முத்திரையை ஆங்காங்கே பதித்துள்ளனர். அந்த வரிசையில் கண்ணனைப் பாரதியார் தம் முத்திரையுடன் பாடியுள்ள தன்மைகளைச் சுவைபட ஆய்வதே "கண்ணன் பாட்டுத்திறன்” என்ற நூலாகும். பேராசிரியர் டாக்டர் ரெட்டியாரின் ஆழ்ந்த புலமையும், தெளிவுடன் கூறும் நெறியும் நூல் முழுதும் மின்னுகின்றன.