பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் பிறப்பு 密? சீதக் கடலுள் அமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் காணிரே, பவளவாயீர்! வந்து காணிரே” (சீதம் - குளிர்ந்த கோதை - பூமாலை) இந்தப் பாசுரத்தில் கண்ணன் தனது திருவடிகளி லொன்றை எடுத்து வாயில் வைத்துச் சுவை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியைத் தன் அருகிலுள்ள கென் களுக்கும் காட்டுகின்றாள். இப்படியே திருப் பாத விரல்கள் கணைக்கால், முழந்தாள், தொடை, முத்தம் (ஆண்குறி). திருவரை, திருதாபி, திருவயிறு, திருமார்பு, திருத் தோள்கள், கைத்தலங்கள், கண்டம், செந்தொண்டை, "வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும்', திருக் கண்கள், திருப்புருவம், மகரக்குழை, நெற்றி ஆகியவற் றைக் காட்டி மகிழ்கின்றார். இறுதிப் பாசுரத்தில் திருக் குழல்களின் அழகு, அழகிய பைம்பொன்னின் கோல்அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்தெங்கும் ஆர்ப்ப மழகன் றினங்கள் மறித்துத் திரிவான் குழல்கள் இருந்தவா காணரீரே, குவிமுலையீர்! வந்து காணிரே!" (மழகன்று - இளங்கன்று; மறித்து - மடிக்கி) என்ற பாடலில் காட்டப் பெறுகின்றது. இங்ங்னம் பாதாதி கேசமாகக் காட்டிய கண்ண னைப் பாரதியார் கண்ணம்மாவின் எழில் நலன்களை 3. பெரியா. திரு 1, 2 : 1. 4. மேலது 1. 2: 20