பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露8 கண்ணன் பாட்டுத்திறன் இசைப்பாடலொன்றில் எடுத்துக் காட்டி அநு:விக் கின்றார். எங்கள் கண்ணம்மா நகைபுது ரோஜாப்பூ: எங்கள் கண்ணம்மா விழிஇந்த்ர நீலப்பூ! எங்கள் கண்ணம்மா முகஞ்செந் தாமரைப்பூ! எங்கள் கண்ணம்மா நுதல் பால சூர்யன்: இங்ங்ணம் பல்லவி'யில் கண்ணனின் முக அழகையும் முகத்துறுப்புகளின் எழிலையும் காட்டிய பாரதியார் "சரனங்களில்’ ஏனைய உடலுறுப்புகளையெல்லாம் கட்டிக் காட்டுகின்றார். எங்கள் கண்ணம்மா எழில்மின் னலைநேர்க்கும்; எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதனவிற்கள்! திங்களை மூடிய பாம்பினைப் போலே செறிகுழல்; இவள் நாசி எட்பூ! (நாசி மூக்கு: எம்பூ - எள்யூ) இந்த முதல் சரணத்தில் திருமுகத்தின் எழிலைக் கான் கின்றோம். அவன் மங்கள வாக்கு நித்தியானந்த ஊற்று: மதுரவாயும் இதழும் அமிர்தம்; சங்கீதமென் குரல்: கலைமகள் வீணையின் கீதம்: சாயல் ஆரம்பை, சதுர் அயிராணி. அடுத்து, திருச்செவிகளை இங்கித நாத நிலையமாக வும், சங்கு நிகரித்த கண்டத்தை அமிர்த சங்கமாகவும், மங்களக் கைத்தலங்களை மகாசக்தியின் இருப்பிட மாகவும், திருவயிற்றை ஆலிலையாகவும், திருவரையை அமிர்த வீடாகவும் காட்டுகின்றார் கவிஞர், திருப்பாத எழிலும் திருமேனியழகும் இறுதி சரணத்தில்’ முத்தாய்ப்பாக அமைந்து விடுகின்றன. 5. தோ. பா. - 55. கண்ணம்மாவின் எழில்.