பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் பிறப்பு 諡驶 சங்கரனைத் தாங்கு நந்திபத சதுரம்; தாமரை யிருந்தாள் லட்சுமி பீடம்! பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம்." என்ற இசைப்பாடற் பகுதியில் இதனை அநுபவித்து மகிழலாம். சாதாரணமாகச் செல்வந்தர் அல்லது பதவியாலும் செல்வாக்காலும் சிறப்புடைய பிரமுகர் வீட்டில் ஒரு இ9த்தை பிறந்து அதற்குப் பெயரிடும் விழா நிகழ்ந்தால் பெரிய பெரிய மனிதர்கள் அன்பளிப்புப் பொருள் களுடன் வந்துவந்துப் போவதைக் காண்கின்றோம். ஆயர் குலக்கொழுந்தாகப் பரமபத நாதனே வந்து அவதரித்தால் விழாக்கோலம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன? ஆழ்வார் கூறுகின்றார்: பத்துநாளும் கடந்த இரண்டாம்நாள் எத்திசையும் சயமரம் கோடித்து மத்தமா மலைதாங்கிய மைந்தனை உத்தானம்செய்து உகந்தனர் ஆயமே." (மத்தம் மா - மதம் பிடித்த யானைகள்; மலை , கோவர்த்தனம்; உத்தானம் செய்து - கைத்தலத் தில் வைத்துக்கொண்டு) பெயரிடும் பன்னிரண்டாம் நாளன்று ஆயர்கள் கன்ன னாகிய குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்கின்றனர். அந்த நாளில் குழந்தையைத் தொட்டிலில் போடும் விழா வும் நடைபெறுகின்றது. இந்தத் தொட்டில் எப்படிப் பட்டது? 6. மேலது - 4. 7. பெரியா. திரு. 1. 1: 8