பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

强朝 கண்ணன் பாட்டுத்திறன் மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன் னால்செய்த வண்ணச்சிறுதொட்டில்லி (ஆணிப்பொன் . மாற்று உயர்ந்த பொன்) பொன்னால் செய்யப்பெற்ற தொட்டில்; மாணிக்கமும் வயிரமும் பதிக்கப்பெற்ற தொட்டில் இதனை நான்முகன் அன்பளிப்பாகத் தருகின்றான். சிவன் மாதுளம்பூ கோவை என்கின்ற அரை வடத்தையும், இந்திரன் எழில் உடைக் கிண்கிணியையும், தேவர்கள் யாவரும் சேர்ந்து வலம்புரிக் சங்கு, சதங்கை, வளையல்கள் ஆகியவற்றையும், குபேரன் ஐம்படைத்தாலியையும், வருணன் முத்து பவளத்தலாகிய மாலையையும் சங்கு வளையல்களையும், பெரிய பிராட்டி யார் திருத்துழாய் மாலையையும், பூமிப்பிராட்டியார் ப்ொற்பூவாலான ஆபரணங்களையும், துர்க்காதேவி பல்வேறு மணப்பொடிகளையும் கொணர்ந்துள்ளனர். இவற்றையெல்லாம் அடைவே சொல்லிச் சொல்லி, சோதிச் சுடர்முடியாய்! தாலேலோ! சுந்தரத் தோளனே! தாலேலோ! ஐயா, அழேல்! அழேல்! தாலேலோ!' என்று தாலாட்டுகின்றார்; அந்த அழகிய தொட்டிலின் அருகே யசோதைப் பிராட்டியாக நின்று ஆழ்வார் தாலாட்டுகின்றார். பாரதியாரும் கண்ணன் பிறப்பை விசாரிப்ப்தற்கு யார் யார் வந்தனர் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகின் றார். இவர் அனைவரும் வந்தனர் என்று கூறுகின்றனரே யன்றி, அன்பளிப்புப் பொருள்களுடன் வந்தனர் என்று குறிப்பிடவில்லை. 8. மேலது, 1.3-1 9. மேலது. 1,3:6, 9,