பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-5 கண்ணன்-என் தோழன் காம் வாழ்வில், பழகிப் பெற்றுள்ள எத்தனையோ நண்பர்களில் சில நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். அவர்க ளுள்ளும் யாரோ ஒருவர் நமக்கு ஆப்த நண்பராக இருப் பார். நம்முடைய கவலைகள், களிப்புகள், ஏமாற்றங்கள், இன்னல்கள் இவற்றையெல்லாம் அவரிடம் சொல்லி அநுபவிக்கின்றோம்; அவரும் நமக்கு அவ்வப்போது வேண்டிய உதவிகளைச் செய்கின்றார். நம்முடைய தொல்லைகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளு கின்றார். ஆயின் நாம் வாழ்வில் ஒர் உத்தம நண்பனைப் பெறுதல் என்பது அரிய மனைவியை அடைதற்போன்றது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அநுபவம் இருக்கும். பாரதியாருக்குக் கண்ணன் தோழனாக இருப் பதைக் காண்போம். இதிகாசக் கண்ணனை மாதிரியாக வைத்துக்கொண்டு புதியதொரு கண்ணனை தோழனாகப் படைத்துக் காட்டு கின்றார் பாரதியார். முதலில் இதிகாசக் கண்ணனைக் காட்டுகிறார். அந்தக் கண்ணன் காத்திரையை அருச்சு னன் மனைவியாக அடைவதற்கு வழியமைத்துத்; தந்தான்; கன்னனைக் கொன்றிட உபாயம் காட்டினான். பன்னிரண்டு ஆண்டுகள் கானகத்தில் வாழ்ந்தபோதும்,