பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தோழன் 釜岛 ஒராண்டு கரந்து வாழ்ந்தபோதும் பாண்டவர்க்கு யாதொரு துன்பமும் நேரிடாதவாறு காத்தான்; பாரதப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாக இருந்து, பல்வேறு உதவிகளைச் செய்தான். இங்ங்ணம் கண்ணன் புரிந்த ஆனைத் தொழில்களையெல்லாம் பன்னி உரைத்தல் இயலாது. பாரதியார் படைத்துக் காட்டும் கண்ணனாகிய தோழனும் பழைய அச்சில் வார்க்கப்பெற்ற புதிய கண்ண னாகத் திகழ்கின்றான். இவனைச் சமய சஞ்சீவி' யாகக் காட்டுகின்றார் கவிஞர். ஊனை வருத்திடும் நோய்வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான்;-நெஞ்சம் ஈனக் கவலைக ளெய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடுவான். எப்படி இதஞ்சொல்வான் என்பதைப் பிறிதோர் இடத் தில் காட்டுவார். சென்றதினி மீளாது மூட ரேநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதிர் சென்றதனைக் குறித்தல் வேண்டா: இன்றுபுதி தாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர் தீமையெலாம் அழிந்துபோம் திரும்பி வாரா." என்று கூறுவார். இதைக் கண்ணனாகிய தோழனின் உபதேசமாகக்கொள்வதில் தவறில்லை. 1. பாரதி அறுபத்தாறு-32; இதிலுள்ள இறுதியடியின் பாதிசேர்ந்து வேதாந்தப் பாடல்களின் தொகுதியிலும் (20) காணலாம்.