பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

强盘 கண்ணன் பாட்டுத்திறன் கண்ணன் பிழைக்கும் வழியை ஒரே பேச்சில் சொல்லி விடுவான். அந்த வழியில் உழைக்கும் வழி, வினையாளும் வழி முதலியவற்றையும் விவரித்துக் காட்டுவான். அழைக் கும் பொழுதினில் சாக்குபோக்குச் சொல்லாமல் அரை நொடிக்குள் வந்து சேர்வான். மழைக்குக் குடைபோல வும், பசிக்கு உணவு போலவும் வாழ்வுக்குக் கண்ணன் வந்து உதவுவான். உற்றுழி உதவுவான்; உறுபொருள் கொடுப் பான். பிறர் குறிப்பினை அவர் சொல்லுமுன் உணர்ந்து கொள்வான். ஆட்டங்கள் காட்டியும் பாட்டுகள் பாடியும் ஆறுதல் செய்திடுவான். நாம் கேலி செய்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்வான். வள்ளுவர் நட்பின் பயனை, நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’ என்று காட்டுவார். உள்ளம் கலக்காமல் முகம் நக நட்பதையும், நகுதற் பொருட்டு நட்டலையும் கடிகின்றார் வள்ளுவர். பொழுது போக்கிற்குத் துணையாக இருந்து கெடுக்காமல் வாழ்க்கைக்குத் துணையாக இருந்து திருத்த வல்லவர்களையே நண்பர்கள் என்று கூறுவர் அப்பெரு மகனார். பாரதியின் தோழன் கண்ணன் எப்படிப் பட்டவன்? உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில் ஓங்கி யடித்திடு வான்;-நெஞ்சில் கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னா லங்கு காறியுமிழ்ந்திடு வான்:-சிறு 2. குறள் - 7.84.