பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தோழன், 4器 பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட பாசியை யெற்றி விடும்-பெரு வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி மெலிவு தவிர்த்திடு வான். சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச் சிரித்துக் களித்திடு வான். இப்படிப்பட்ட கண்ணன் தன் சொற்படி நடவாதவர் கட்குத் தொல்லை இழைத்திடுவான். இத்தகைய கண்ணனை இழந்துவிடில் உலக வாழ்வு இல்லை என்கின் றார் கவிஞர். கண்ணனாகிய தோழன் பேச்சில் சதுரன். நாம் சினங்கொள்ளும் பொது ஒரே சொல்லில் நம்மைக் குலுங்கிச் சிரிக்கச் செய்துவிடுவான். மனம் வேறுபட்ட போது ஏதோ ஒன்று செய்து மகிழ்ச்சி தளிர்த்திடச் செய்வான். ஆபத்து நேரிடும்போது அருகில் வந்து நின்று அது நேராதவாறு விலக்கி விடுவான். விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள்போல் நமக்குத் தீமைகள் நேர்ந்தால் அவற்றை அழித்துவிடுவான். நெறிதவறி நடப்பவர்களை உதைத்து நசுக்குவான். மலைமலையாகப் பொய்கள் உரைப்பான். ஆனால், அவை: யாவும் பொறைதீர்ந்த நன்மை பயப்பனவாகவேஇருக்கும். சில சமயம் விசித்திரப் பண்புடையவனாகக் (ouixotic) காணப்படுவான். பெண்மைக் குணமுடை யான்:-சிலநேரத்தில் பித்தர் குணமுடை யான்;-மிகத் தண்மை குணமுடை யான்;-சிலநேரம் தழலின் குணமுடை யான் என்பது அவன் குண ஒவியம். சில சமயம் ஆவனிடம் வீரம் பொலிந்து நிற்கும்; சில சமயம் சூதுவாது அறியாத