பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

《盘 கண்ணன் பாட்டுத்திறன் குழந்தைகள் போல் பேசுவான். நல்லவர்கட்டுத் தீங்கு தண்ணாமல் நயமுறக் காத்து நிற்பான். அல்லவருக்கு நஞ்சைவிடவும் அழலைவிடவும் .ெ கா டி ய வ னாக இருப்பான். கருக்கமாகக்கூறின், காதல் விளைய மயக்கிடும் பாட்டினில் கண்மகிழ் சித்திரத் தில்-பகை மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம் முற்றிய பண்டிதன் காண்;-உயர் வேத முணர்ந்த முனிவ ருணர்வினில் மேவு பரம்பொருள் காண்;-நல்ல கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன் என்பது அவனைப்பற்றிய சொல்லோவியம். தோழக் கண்ணனைப் பாரதியார் காட்டும் போது நமது மனம் தன்னிச்சையாக நமது நண்பர்களைச் சோதிக்கத் தொடங்குகின்றது. ஆனால், தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் திரா இடும்பை தரும்." என்ற வள்ளுவம் நம்மை எச்சரிக்கின்றது. ஆயினும் பாரதி காட்டும் தோழனான கண்ணனையே நாம் விரும்பு ஒன்றோம்; நேசிக்கின்றோம். நாம் வாழ்க்கையில் உண்மைத் தோழராகக் கருதுபவரிடம் இந்தக் குணங்கள் காணப்பெறாவிட்டாலும், நாம் உணர்ச்சியின்மூலம் தான முயல்கின்றோம்; இதனால்தான் பாரதியின் :கன்னன்-என் தோழன் கவைக்குதவாத கவிதைக் கலையாக நின்றுவிடாமல், நமது வாழ்வின் குறிக்கோளை எடுத்துக் காட்டும் சொல்லோவியமாகத் திகழ்கின்றது. நாமும் கண்ணனை நம்மில் ஒருவனாகவே கருதிவிடு 3. குறள். - 510,