பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s $of ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் நிலைத்து வாழ்ந்து வரும் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றுத் து அவைகளிலுள்ள கருத்துகளை, கண்ணன் பாட்டுத் திறனை விளக்குவதற்கு ஆசிரியர் பயன்படுத்தியுள்ளமை அவருடைய பரந்துபட்ட ஆய்வுநெறியைப் புலப்படுத்துகிறது. தொல்காப்பியத்தில் பல தேவனைக் காட்ட ஆசிரியர் முயன்றிருப்பதை (பக்கம் 5) நோக்கின் அவர் வேட்கை புலனாகும். சம்பந்த ஞானத்தை "இறைவனுடன் நமது உறவுகள்' என்ற தலைப்பில் மிக அற்புதமாகப் பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் எடுத்துவிளக்கியுள்ளார். கண்ணன் பாடல்களில் ரசங்களைக் கூறிப் பாரதி எழுதியுள்ளதை யாவரும் அறிவர். எனவே, அச்சுவைகளைப் பற்றி ஆசிரியர் வடமொழிவழி நின்று விளக்குவது ஆய்வாளர் கவனத்தை ஈர்ப்பதாகும். 'எல்லாவற்றையும் இன்பமாக உணரும் நிலை மனத்திற்குக் கிட்டிவிட்டால் அது பெறற்கரிய பேறாகும். அந்நிலை கொண்ட மனம் வாய்க்கப் பெற்றவனே கவிஞன் (பக்கம் 17) என்ற ஆசிரியர் கூற்று ஆழ்ந்து எண்ணத்தக்கது. "முனிவர் துக்ககரமான நிகழ்ச்சியை ஏற்றிருப்பாராயின் அவரது வாயினின்று கவிதை வெளிவராது என்பது திண்ணம். கவிதை ஆனந்தக் களிப்படைந்த உள்ளத்திலே உருவெடுக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம்’ (பக்கம் 27) என்ற கருத்தைப் பார்க்கும்போது அவல நிலையில் ஒப்பாரி தோன்றுகிறதே என்ற எண்ணம் முகிழ்க்கலாம். சுவைகளை ஒவ்வொரு பாடலிலும் ஆசிரியர் பொருத்திக் காட்டியிருப்பது மிகப் பயனுடையதும் தக்கதுமாம். நூல் முழுமையும் ஆங்காங்கே அவை எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.