பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தோழன் 皇宫 கின்றோம். இந்தப் பாட்டிற்கு இராகம், தாளம், குறிப்பு காட்டியுள்ளார் கவிஞர். பாட்டைப் படிப்பதால்இல்லை பாடுவதால் - வத்சலரசம் - வாத்சல்ய பாவம் - தட்டுப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார். பாட்டைப் காடி இந்தச் சுவையை அநுபவிக்கலாம். இவ்விடத்தில் இன்னொரு குறிப்பையும் நினைவில் கொள்ளுதல் வேண்டும். இலக்கணப்படி வாத்சல்யம்' என்பது 'ரணம் அன்று. வத்சலா என்பது கன்றினைக் குறிக்கும். கன்றினிடத்தில் பசு இருக்கும் நிலையைக் காட்டுவது வாத்சல்யம். உண்மை யென்னவென்றால் சிருங்காரச் சுவையே இப்படிப் பேசப் பெறுகின்றது. சிருங்காரத்தைத் தமிழர்கள் உவகையென்று குறிப்பிடு வார்கள், கணவன் மனைவிமீதும், மனைவி கணவன் மீதும் காட்டுவதுதான் சிருங்காரம். தாய் குழந்தை மீது கொண்டுள்ள உணர்வு அன்பு எனப்படும். இதுவே வாத்சல்யம். அடியார்கள் ஆண்டவன்மீது கொண் டிருப்பது பக்தி எனப்படும். வாத்சல்யம், பக்தி என்பவை யெல்லாம் சிருங்காரத்தின் பரிணாமமே. வாத்சல்யம் பக்தி என்ற இவற்றை ரஸ்த்தில் அடக்கிப் பேசுவது ஒருவித உபசாரமேயாகும். இங்குக் கண்ணனாகிய தோழன்மீது காட்டும் ஆன்பைத்தான் கவிஞர் வத்ஸ்ல ரசம் என்று குறிப்பிடு கின்றார். பாட்டில் மனம் நன்கு ஈடுபட்டுப் படிக்கும் போது இந்த ரஸ்த்தைக் கண்டு மகிழலாம். கவிதையைச் சுவைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இதனை அறிய முடியாது.