பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-8 கண்ணன்-என் தாய் இறைவனைத் தாய் நிலையிலும், தந்தை நிலையிலும் வைத்து எண்ணுவர் சமயச் சான்றோர். அன்புகாட்டி வேண்டியவற்றை ஈவதால் தாயும், கல்வி முதலியவற்றை நடத்துவதில் தந்தையும் பொறுப்பாக இருப்பதால் அவர் கள் உவமையாகக் கொள்ளப் பெற்றனர். ...நல்வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே." என்றும், மேலாத் தாய்தந்தையும் அவரே இனி ஆவாரே." என்றும், நம்மாழ்வார் கூறியிருத்தலைக் கண்டு மகிழலாம். இந்தத் தந்தை-மகன் உறவு நவவித சம் பந்தங்களில் ஒன்றாகும். நவவித சம்பந்தத்தைக் கூறும் திருமந்திரம் தாய்-மகன் உறவினைக் குறிப்பிடவில்லை. ஆனால், இந்தச் சிந்தனை சாதாரண மக்களிடமும் உள்ளது. ஆழ்வார் பெருமக்களிடமும், கம்பின் ப்ோன்ற 1. திருவிருத் : 95 2. திருவாய் 5. 1:8