பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தாய் 空籍 மாபெரும் கவிஞர்களிடமும் இந்தச் சிந்தனையைக் காணலாம். தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங் கத்துள் ஒங்கும் ஒளியுணர் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார்." |ஒங்கும் - விஞ்சியிருக்கும்; ஒளி - தேசு) என்று தொண்டரடிப்பொடிகளின் திருவாக்கில் தாய், தந்தை உறவினைக் காணலாம். திருமங்கையாழ்வாரின் திருவாக்கில் தாய்-மகன் உறவு தெளிவாகக் காணப் பெறுகின்றது. தாய்நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு ஆய்நினைந்து அருள்செய்யும் அப்பனை." என்ற பாசுரப் பகுதியில் தாய்-கன்று உறவினை உவமை யாகக் காட்டித் தந்தை-மகன் உறவினைக் காட்டி னாலும் அப்பன்’ என்ற சொற்றெங்ஸ் தாயையே நினைக்கச் செய்கின்றது. கம்பநாடனும் கோசலையைக் குறிப்பிடுங்கால், கன்றுபிரி காராவின் துயருடை கொடி. என்று கூறுவான். கன்று-காரா உறவு, தாய்-மகன் உறவினை நினைவு கூர்ச் செய்கின்றதன்றோ? கவிஞர் கண்ணனைத் தாயாகக் கருதிப்பாடும்போது பராசக்தியே அவருடைய தாயாகிவிடுகின்றாள். 3. திருமாலை - 37 4. பெரி. திரு. 7.3:2. 5. கம்பரா. அயோத். கங்கை காண் - 67. موسسه Er است و تنه