பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵Q கண்ணன் பாட்டுத்திறன் எனையாளும் மாதேவி வீரர் தேவி இமையவரும் தொழுந்தேவி, எல்லைத் தேவி மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்கும் தேவி மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே." என்று கூறும் கவிஞர்தான் கண்ணனைத் தாயாகப் பாவித்து வழிபடுகின்றார். முதலில் உடலுக்கு உரம் ஊட்டுவதைப்பற்றிப் பேசுகின்றார் கவிஞர்: உண்ண உண்ணத் தெவிட்டாதே-அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும்பால்; வண்ணமுற வைத்தெனக் கே-என்றன் வாயினிற்கொண் டுட்டுமோர் வண்மை யுடையாள் என்ற பகுதியில் அன்னை பாலூட்டிச் சீராட்டு வதைக் காட்டுகின்றார். மணிவாசகப் பெருமானும் பால் நினைந்து ஊட்டும் தாய்' என்று அன்னையின் பெருமையை-அருமையை-எடுத்துக்காட்டுவர். தாய்ப் பால் உண்ண உண்ணத் தெவிட்டாதது; இந்தப் பால் உயிரெனும் முலையில் உணர்வாக ஊறுவது. குழந்தை பிறந்தவுடன் அதற்கு வேண்டும் பால் எங்கிருந்து கிடைக் கும் என்பதை அது அ றியாது. தாய்தான் தன் முலைக் காம்பை வண்ணமுற அதன் வாயில் வைத்து ஊட்டு ஒன்றாள். சக்தி தேவிதான் கண்ணம்மா வடிவில் தனக்கு இவ்வாறு ஊட்டுவதாகக் கருதுகின்றார் கவிஞர். அடுத்து, கண்ணம்மா தனக்குக் கதைகள் கூறுவதைக் காட்டுகின்றார். இங்கு அன்னையைக் கவிஞர் அகில உருவமாகக் (Cosmic form) காண்கின்றார். வானமே தொந்த பாடல்கள்-நெஞ்சோடு சொல்வது - 2 7. திருவாச~ பிடித்தபத்து 9.