பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தாய் 荔魔 இவனது கைகள்: பூமியே இவளது மடி. கவிஞரைக் கைகளால் அனைத்துத் தன் மடியில் கிடத்திக்கொண்டு கதைகள் சொல்லுகின்றாள். கவிஞர் இந்நிலையை, கண்ணனெனும் பெயருடை வாள்.-என்னைக் காட்டிநிறை வான்னனுந்தன் கையிலனைத்து மண்ணெனுந்தன் மடியில் வைத்தே-பல மாயமுறுங் கதைசொல்வி மனங்களிப்பாள். என்று காட்டுவார். இந்தக் கண்ணனைச் சக்தியின் வடிவாகப் பிறிதோரிடத்தில், எண்ணிலாப் பொருளும் எல்லையில்வெளியும் யாவுமாய் நின்றனை." என்றும் காட்டுவார். கதைகள் குழந்தைகட்கு இன்ப்ந் தரக்கூடியவை: வளர்ந்தவர்களும் முதியோர்களும் கூட கதைகளில் மனத்தைப் பறிகொடுப்பர். பண்டிருந்தே கதைகள் மானிட வாழ்க்கையில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளன. நமது நாட்டில் கதை சொல்வது ஒருகலை யாகவே மதிக்கப்பெற்று வந்துள்ளது, சிறு குழந்தையாக இருந்தபொழுது சிவாஜி அன்னையின் மடியிலிருந்து கொண்டே பல கதைகளைக் கேட்டதாக வரலாற்று மூலம் அறிகின்றோம். திருவிழாக் காலங்களிலும், பிற சமயங்களிலும், திருக்கோயில்களிலும், திருமடங்களிலும் புராணச் சொற்பொழிவுகள் செய்யப்பெற்று வருவதை இன்றும் காணலாம். கதா காலட்சேபங்கள் செய்வது இன்றும் ஒரு சிறந்த கலையாகப் போற்றப்படுகின்றது. பாமர மக்களுக்கு உயர்ந்த சமய உண்மைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் கற்பிப்பதற்கு இக் 8. தோ. பா.-மகாசக்தி பஞ்சகம் - 2