பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 கண்ணன் பாட்டுத்திறன் கதைகள் பெரிதும் உதவுகின்றன. எத்தனையோ ப்ேர் இக் கதைகளைக் கேட்டு உள்ளத் தெளிவு அடைந்துள்ளனர்; அடைந்தும் வருகின்றனர். இங்ங்னம் க வி ளு ? கண்ணம்மாவின் மடியிலிருந்து கொண்டே கதை களைக் கேட்கின்றார். கவிஞரின் கண்ணம்மா உளவியல் நுட்பங்களை நன்கு அறிந்தவன். வயதிற்கேற்றவாறு குழந்தைகளின் மனப் பான்மையும் உளப்போக்கும் விடுப்பார்வமும் மாறிக் கொண்டு வரும் என்பதை நன்கு அறிந்தவள். அதற் கேற்றவாறு கதைகள் கூறுவாள், இன்டமெனச் சிலகதைகள்-எனக் கேற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள் துன்பமெனச் சில கதைகள்-கெட்ட தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள் என் பருவம் என்றன் விருப்பம்-எனும் இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே அன்பொடவள் சொல்லி வருவாள்-அதில் அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். என்ற பகுதியில் கண்ணம்மாவின் கதை சொல்லும் போக்கைக் காணலாம். கண்ணம்மா கவிஞருக்கு இந்த அகிலத்தின் தோற்றத் தினையே அழகாக எடுத்துக்காட்டிப் ப்டைப்பின் விந்தை யில் பாலனின் மனத்தைப் பறிகொடுக்கச் செய்துவிடு கின்றாள். கதைப்போக்கிலேயே வான இயலையும், புவியியலையும் பிற இயல்களையும் ஆற்புதமாகத் தெரிவிக்கின்றாள். ஆண்டகோள இயல் ஆற்புதமாக எடுத்துரைக்கப் பெறுகின்றது.