பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணன்-ான் தாய் 53 வாணவெளியில் எண்ணற்ற அண்டங்கள் தொங்கிய வண்ணம் தம்மைதி தாமாகவும் பகலவனை வலம் வந்த நிலையிலும் வெவ்வேறு வேகத்தில் சுழல்கின்றன என்று அறிவியலறிஞர்கள் கூறுவர். மணிவாசகப் பெருமானும் அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்று கூறுவர். இதனையே குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் திரிகூடராசப்ப கவிராயர், சாட்டிநிற்கும் அண்டமெலாம் சாட்டையிலாப் பம்பரம்போல் ஆட்டி நிற்கும் குற்றாலத்து அண்ணலார்." என்று:கூறுவர். அலகிலா விளையாட்டுடை ஆண்டவன் சாட்டைத் துணையின்றியே இத்தனை அண்டங்களையும் ஆட்டிவைக்கின்றான் என்றும், அஃது ஒரு பிம்பர விளையாட்டு போல் உள்ளது என்றும் குறிப்பால் உணர்த்துவர் அக் கவிஞர். பாரதியாரும் இந்த அகிலத்தின் காட்சியை, நக்கபிரான் அருளால்-இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்! தொக்கன அண்டங்கள்-வளர் தொகைபல கோடிபல் கோடிகளாம்! இக்கணக் கெவரறிவார்?-புவி எத்தனை புளதென்ப தியாரறிவார்: 9. ജൂഖ്, திருவண்டப் பகுதி. அடி (1-4) 10. குற். குறவஞ்சி-செய். 107.