பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷盛 கண்னன் பாட்டுத்திறன் தக்கபிரான் அறிவான்-மற்று நானறியேன்பிற நரரறியார்; தொக்கபேர் அண்டங்கள்-கொண்ட தொகைக்கெல்லை இல்லையென்று சொல்லுகின்ற தக்கபல் சாத்திரங்கள்-ஒளி தருகின்ற வானமோர் கடல்போலாம்: அக்கட லதனுக்கே-எங்கும் அக்கரை இக்கரை யொன்றில்லையாம் இக்க. லதனகத்தே-ஆங்கங் கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள் போல் தொக்கன உலகங்கள்:-திசைத் து வெளி பதனிடை விரைந்தோடும்; மிக்கதோர் வியப்புடைத்தாம்-இந்த வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்.” என்று காட்டுவர். இக்கருத்தினையே பிறிதோர் இடத்தில் மகாசக்தியை வாழ்த்தும் முறையில், விண்டு ரைக்க அறிய அரியதாய் விரிந்த வான வெளியென நின்றனை: அண்ட கோடிகள் வானில் அமைத்தனை: அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை: மண்டலத்தை அணுவணு வாக்கினால் வருவ தெத்தனை யத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை' என்று காட்டுவதையும் காணலாம். எல்லாம் சக்தி மயம்’ என்ற கொள்கையுடையவரல்லவா? இதனால்தான், 11. தோ. பா.-கோமதி மகிமை - 5,6,7. 12. மேலது-மகாசக்தி வாழ்த்து.