பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் தாய் あ5 ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்-அைத அன்னை யெனப்பணிதல் ஆக்கம்." என்று சொல்லி வைத்தார் எனக் கருதுதல் வேண்டும். தாய்-கண்ணம்மா-நிலையிலுள்ள கண்ணன், சின்ன சின்ன பொம்மை சிங்கார பொம்மை எனக் குழந்தைக்குப் பொம்மைகளை ஆறிமுகம் செய்வது போல் காட்டுவான். இந்த வியன்பெரு அகிலத்தின் காட்சியை, விந்தைவிந்தை யாக எனக்கே-பல விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள் என்று காட்டுவர் கவிஞர். அடுத்து, விண்வெளியிலுள்ள பொருள்களை-காட்சிகளை-ஒவ்வொன்றாகக் காட்டு கின்றா: * * சந்திர னென்றொரு பொம்மை-அதில் தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும் மந்தை மந்தையா மேகம்-பல வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும் முந்தஒரு சூரிய லுண்டு-அதன் முகத்தொளி கூறுதற்கோர் மொழியிலையே அம்புலி, முகில், பகலவன் இவற்றைக் காட்டிய கவிஞர் இந்தக் கோள்கட்கு மிகத் தொலைவிலுள்ள விண்மீன் களையும் காட்டுகின்றார். வானத்து மீன்க ளுண்டு-சிறு மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும் நானத்தைக் கணக்கிடவே-மனம் நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை; مسس سمیسسماےم--- 13. டிெ-சக்தி விளக்கம்