பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 6 கண்ணன் பாட்டுத்திறன் (நானத்தை - நான் ஆத்தை - நான் ஆதை: இது பிராமணர் வழக்கு) வானத்தில் கணக்கிலடங்கா உடுக்களைக் காட்டிய கவிஞர் பூமிக்கு வருகின்றார். முதலில் மலைகளைக் காட்டுகின்றார். கானத்து மலைக ளுண்டு-எந்தக் காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை, மோனத்தி லேயிருக்கும்-ஒரு மொழியுரை யாதுவிளை யாடவருங்காண், நல்ல நல்ல நதிக ளுண்டு-அவை நாடெங்கும் ஒடிவிளை யாடிவருங்காண்; மெல்ல மெல்லப் போயவைதாம்-விழும் விரிகடற் பொம்மையது மிகப்பெரிதாம்; எல்லையதிற் காணுவ தில்லை;--அவை எற்றிதுரை கக்கியொரு பாட்டிசைக்கும் ஒல்லெனுமப் பாட்டினிலே-ஆ ம்மை ஒமெனும் பெயரென்றும் ஒலித்திடுங்காண். நதிகள் பாய்ந்து வருவதை நாடு முழுவதும் விளையாடி, வருவதாகக் கூறுவது அற்புதம், அற்புதம்! ஆங்ங்னம் விளையாடி வரும் ஆறுகள் இறுதியில் விரிகடல் பொம்மையதில் கோய் விழுகின்றனவாம். அந்தக் கடல் துரை கக்கிப் பாட்டிசைக்கும்; அப்பாட்டினில் ஓம்’ என்ற பெயர் ஒலித்திடும் என்கின்றார். இதில் சமயஞானம் தட்டுப்படுகின்றது. கண்ணம்மா என்ற தாய் பின்ன்ரித் தமக்குக் கொடுத்த வற்றையெல்லாம் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். சோலை களையும் காவினங்களையும் நல்கி அவற்றின் மூலமும் பலநிற மணி மலர்களையும், தருக்களில் தூங்கிவிடும் கனிவகைகளையும் ஞாலமுழுதும் நிறைந்திருக்குமாறு நயத்தகும் பொம்மைகளாகக் குவித்து வைத்திருப்னதாகக்